உச்சநீதிமன்ற புதிய பிரதம நீதியராக ப்ரீதி பத்மன் சூரசேன பரிந்துரை
Sri Lanka
Supreme Court of Sri Lanka
Law and Order
By Shalini Balachandran
உச்சநீதிமன்றத்தின் புதிய பிரமத நீதியரசர் பதவிக்கு நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவின் (Preethi Padman Surasena) பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்புப் பேரவைக்கு குறித்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளார்.
பதவியில் இருந்து ஓய்வு
தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இம்மாதம் 25 ஆம் திகதியுடன் 65 வயது பூர்த்தியாவதன் காரணமாக தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளவுள்ளார்.
அதன் காரணமாக ஏற்படவுள்ள பிரதம நீதியரசர் பதவி வெற்றிடத்துக்கே நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்