கொழும்புக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கப்பல்!
ஈரானியக் கப்பலான IRIS Bushehr இன்னும் திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர், அக்கப்பல் தற்போது கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இயந்திரக் கோளாறு
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ஈரானியக் கப்பலான IRIS Bushehr கொழும்பிலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ளது.

நாங்கள் அதைத் திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம், ஆனால் இயந்திரக் கோளாறு காரணமாக அவ்வாறு செய்ய முடியவில்லை.
அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை மற்றொரு தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளோம். நாங்கள் கப்பலைத் திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தி வைப்போம்." என்றார்.
[KHBPRIG
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |