கார்த்திகை தீபமாக இஸ்ரேலை காட்சியளிக்க வைத்த ஈரானின் கொடிய தாக்குதல்
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் 19ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் நேற்றிரவு (மார்ச் 18) மேற்கொண்ட பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதல் இஸ்ரேலை அதிரச்செய்துள்ளது.
குறித்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ஈரானின் "பழிவாங்கல்" (revenge) நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்
ஈரான் விடுத்த பல அலைகளான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மத்திய இஸ்ரேலில், குறிப்பாக ரமத் கான் (Ramat Gan) பகுதியில் தாக்குதலை நிகழ்த்தியுள்ளன.

இதில் கிளஸ்டர் குண்டுகள் (cluster munitions) பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஏவுகணைகள் வானில் பிரிந்து பல சிறு குண்டுகளாக பரவி தாக்கும் திறன் கொண்டவை.
இஸ்ரேலிய அவசர சேவை அமைப்பான மேகன் டேவிட் அடோம் (Magen David Adom) தெரிவித்தபடி, ரமத் கான் பகுதியில் உள்ள ஒரு வீட்டு கட்டிடத்தில் ஏற்பட்ட தாக்குதலில் 70 வயதை நெருங்கிய தம்பதியினர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதல்
மேலும் பலர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெல் அவிவ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பல இடங்களில் தாக்குதல் எச்சங்கள் விழுந்ததால் தொடருந்து சேவைகள் தடைபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் மூத்த தலைவர்களை கொன்றதற்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
குறிப்பாக, அலி லாரிஜானி (Ali Larijani – மூத்த அரசியல் ஆலோசகர்), இன்டெலிஜென்ஸ் மினிஸ்டர் எஸ்மாயில் கதிப் (Esmail Khatib) போன்றோர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.
IDF-இன் தொடர் தாக்குதல்கள் ஈரானின் IRGC (புரட்சிகர காவல்படை) உள்கட்டமைப்பு மற்றும் பாசிஜ் படைகளை இலக்காகக் கொண்டுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "ஈரானிய தலைவர்களை வேட்டையாடுவோம்" என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 13 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்