ஈரானின் முக்கிய எரிவாயு வயலில் தாக்குதல்! சடுதியாக அதிகரித்த கச்சா எண்ணெயின் விலை!
உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகில் அமைந்துள்ள ஈரானிய எரிசக்தி நிலையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை, கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரத்திலிருந்து 5%க்கும் மேல் அதிகரித்து, 109.91 டொலராக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை
இருப்பினும், அதன் பிறகு விலைகள் சிறிதளவு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவில் இயற்கை எரிவாயு விலை 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் உள்ள பெட்ரோ கெமிக்கல் வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து விலை உயர்வு இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் இந்தத் திடீர் உயர்வு இருந்தபோதிலும், அவை இந்த மோதல் காலகட்டத்தில் பதிவான உச்சபட்ச விலைகளை விடக் குறைவாகவே உள்ளன.
முன்னதாக, மார்ச் 9 அன்று, கச்சா எண்ணெயின் விலை 116.78 டொலராகப் பதிவாகியிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 13 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்