ஐக்கிய அரபு அமீரக விமானப்படைத் தளத்தின் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்!
Israel
United Arab Emirates
Iran
Middle East
World
By Shalini Balachandran
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அல் மின்ஹாத் (Al Minhad) விமானப்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இருப்பினும், அங்கிருந்த பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலியப் படையினருக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தமது தரப்பில் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
சில சொத்துகள்
இருப்பினும், இந்தத் தாக்குதலால் அவுஸ்திரேலியப் படைகளுக்குச் சொந்தமான சில சொத்துகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தளத்திலுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் சேத விவரங்கள் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |