குவைத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்
குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான மினா அல்-அஹ்மதி (Mina al-Ahmadi) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு செயல்பாட்டு அலகு மீது இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் அங்கு தீ ஏற்பட்டது என்று குவைத் பெட்ரோலியம் (Kuwait Petroleum Corporation - KPC) அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குவைத் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, குவைத் நேஷனல் பெட்ரோலியம் (KNPC) நடத்தும் இந்த ஆலையின் ஒரு பிரிவு ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது.
தாக்குதலால் ஏற்பட்ட தீ
தாக்குதலால் ஏற்பட்ட தீயை அவசர குழுக்களும் தீயணைப்பு படையினரும் உடனடியாக கட்டுப்படுத்தினர் என்றும், எந்த உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.

மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம் மத்திய கிழக்கின் மிகப்பெரியவற்றில் ஒன்றாகும். இதன் தினசரி உற்பத்தி திறன் சுமார் 730,000 பேரல் ஆகும்.
இந்த தாக்குதல், பிராந்தியத்தில் தொடர்ந்து நடைபெறும் பதிலடி தாக்குதல்களின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஈரான் தரப்பிலிருந்து வளைகுடா நாடுகளின் எண்ணெய் வசதிகள் மீது இதேபோன்ற தாக்குதல்கள் நடந்ததாக பல்வேறு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இதேநேரத்தில், அருகிலுள்ள மினா அப்துல்லா (Mina Abdullah) சுத்திகரிப்பு நிலையத்திலும் (தினசரி உற்பத்தி திறன் 454,000 பீப்பாய்) மற்றொரு ட்ரோன் தாக்குதல் நடந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதுவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவைத் அரசு மற்றும் KPC, சம்பவத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |