காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் : இலங்கையின் நிலை!
காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
காலநிலை தாக்கங்களைக் குறைப்பதற்கான அணுகுமுறை திட்டத்தின் பணிப்பாளர் பந்துல சிறிமல் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த நிலையில், அனர்த்த நிலைமைகள் தொடர்பான முன்னறிவிப்புத் தரவுகளை விரைவாக வழங்குவதற்காக வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அமைப்புகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
முன்கூட்டியே முன்னறிவிப்பு தரவுகளை வழங்குவதன் மூலம் மனித உயிர்களை மட்டுமல்லாது சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த செலவு
இலங்கையில் ஏற்படும் அனர்த்தங்களுக்காக வருடமொன்றுக்கு 238 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதாக பந்துல சிறிமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நீர்த்தேக்கங்கள் தொடர்பான அனர்த்த நிலைமைகளைத் தடுப்பதற்கு 152 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அனர்த்த நிலைமைகளைத் தணிப்பதற்காக இலங்கையில் ஒரு குடும்பம் 18 ஆயிரம் ரூபாவையும், ஒருவர் வருடத்திற்கு 4 ஆயிரம் ரூபாவையும் செலவிட வேண்டியுள்ளதாக பந்துல சிறிமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |