உலக சந்தையில் வீழ்ச்சியடையும் கச்சா எண்ணெய்யின் விலை
உலக சந்தையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.74 டொலர்களாகவும், வெஸ்ட் டெக்சாஸ் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.03 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவில் உச்சத்தை எட்டியிருந்தது.
வீழ்ச்சிக்கான காரணம்
இந்நிலையில்,சவுதி அரேபியா மற்றும் ஈராக் கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைத்தமை, சீனா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்த நேர்மறையான தகவல்கள் இதற்குக் காரணமாக அமைந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மார்ச் மாதம் முதல் நாளொன்றுக்கு 200,000 பீப்பாய்கள் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க வட்டி விகிதங்கள் குறித்த அந்நாட்டு மத்திய வங்கி முடிவெடுப்பதற்கு சில நாட்களுக்கு முன் சந்தையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |