புத்தாண்டில் 8 பில்லியனை தாண்டிய உலக மக்கள் தொகை : வெளியாகியுள்ள தகவல்!
புத்தாண்டில் உலக மக்கள் தொகை 8.1 பில்லியனாக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வேர்ல்டோமீட்டர் எனும் கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலக மக்கள் தொகை இன்றைய நாளில் (1) 8 பில்லியனை தாண்டும் என அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் நேற்றைய தினம் (31) கணித்திருந்தது.
இதன்படி, இன்றைய பிறப்பு வீதங்களுடன் 8.1 பில்லியனாக உலக மக்கள் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு வீதம்
கடந்த ஆண்டில் உலக மக்கள் தொகை 7 கோடியே 50 லட்சத்தால் அதிகரித்திருந்ததாக அந்த அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டில் உலகளாவிய பிறப்பு வீதம் வினாடிக்கு 4.3 ஆகவும், இறப்பு வீதம் வினாடிக்கு 2 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் சனத்தொகையை இந்தியா கடந்து, அதிக சனத்தொகையை கொண்ட நாடாக தன்னை பதிவு செய்துள்ளது.
பாரியளவில் அதிகரித்துள்ள பிறப்பு வீதம் இந்தியாவின் இந்த சாதனைக்கு காரணமாக அமைந்துள்ளதென அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சனத்தொகை கட்டுப்பாடு
இந்த பின்னணியில், உலகளாவிய நாடுகள் தங்கள் நாடுகளின் சனத்தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
இதற்கமைய, குடும்ப கட்டுப்பாட்டு நிகழ்ச்சிகள், திருமணத்துக்கான சட்ட ரீதியான வயதை அதிகரித்தல், பெண்களுக்கான கல்வியை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை குறித்த நாடுகள் முன்னெடுக்கின்றது.
இதேவேளை, எதிர்வரும் 2037 ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை 9 பில்லியனை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |