திடீரென முடங்கிய ஜிமெயில் சேவை - உலகம் முழுவதும் பயனர்கள் அவதி
ஜிமெயில்
உலகில் பெரும்பாலான மக்கள் கூகுள் மற்றும் ஜிமெயில் சேவைகளை அன்றாடம் சார்ந்திருப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
உலக அளவில் சுமார் 150 கோடிய பயனர்கள் ஜிமெயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஜிமெயில் சேவையானது செயலி வடிவிலும் கிடைக்கும் நிலையில், இந்தாண்டில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக ஜிமெயில் உள்ளது.
உலகம் முழுவதும் முடங்கி ஜிமெயில்
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜிமெயில் சேவைகள் நேற்று உலகம் முழுவதும் முடங்கியதால் லட்சக்கணக்கான பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
பல பயனாளர்களுக்கு மெயில் அனுப்புவதிலும், பலருக்கு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதலில் தங்கள் கணினி, தொலைபேசியில் தான் ஏதோ கோளாறு போல என்று நினைத்த பயனர்கள் இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவிய போதே உண்மைத்தன்மையை அறிந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கூகுள் நிறுவனமும் ஜிமெயில் செயலிழந்ததை உறுதி செய்தது.
இதை உடனடியாக தீர்வு காணும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொண்ட நிலையில், இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சேவை இயல்பு நிலைமைக்கு கொண்டு வரப்பட்டது.