புகலிட ஈழசினிமாவின் ஆரம்பகால செயற்பாட்டாளர் ஞானம் பீரிஸிற்கு புகழ் வணக்கம்
புகலிட ஈழசினிமாவின் ஆரம்பகால செயற்பாட்டாளர் ஞானம் பீரிஸ் அவர்களின் நல்லடக்க நிகழ்வு இன்று (25.02.2025) பாரிசின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Cimetière de Maisons-Alfortல் நடைபெற்றது.
1980களின் தொடக்கத்தில் பிரான்ஸ் தேசத்தில் அன்றைக்கு இருந்த ஆளணி தொழிநுட்ப வளங்களைக் கொண்டு, அவைகளை ஒருங்கிணைத்து 'தனிப்புறா' எனும் முதலாவது புகலிட முழுநீளத் திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, வெளியிட்டவர் ஞானம் பீரிஸ் அவர்கள்.
கலைஞர்களுக்கு உந்துதலாக இருந்தவர்
அத்துடன் நிற்காமல் திரைச் செயற்பாடுகளில் தொடர்ந்து இயங்கி மேலும் படைப்புகளை தந்ததுடன் ஏனைய கலைஞர்களும் திரைத்துறைச் செயற்பாடுகளில் ஈடுபட உந்துதலாக இருந்தவர்.
புகழ் வணக்கம்
இவரதும் இவரைப்போன்ற இன்னும் பலரதும் அன்றைய ஆரம்பகால சவாலான செயற்பாட்டு அத்திவாரத்தின் நீட்சியே, இன்றைய எமது இளைய தலைமுறையின் சினிமாத்துறைச் சாதனைகளும் பாய்ச்சல்களும் ஆகும். இந்த நன்றியுணர்வோடு ஞானம் பீரிஸ் அவர்களுக்கு ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார், நண்பர்கள், சக கலைஞர்களின் கரம் பற்றி எமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


