கோட்டாபய வெளியேறும் வரை நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படாது!!
தற்போதைய அரச தலைவரின் கீழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காது, அவர்கள் வெளியேறும் போது நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கான வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம்,சர்வ கட்சி பேராட்டக்காரர்கள் உட்பட பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறை மூலம் நாடு ஜனநாயக நிலைக்கு மாறும் வரை நாட்டின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். மக்களின் எதிர்பார்ப்புகளுடன் விளையாடி போராட்டத்தை காட்டிக் கொடுக்க முடியாது.
போராட்டம் நடத்தும் இளைஞர்களை அரசாங்கம் கைது செய்வதுள்ளது, அவர்களுக்கு எதிராக அரச மிலேச்சத்தனத்தை பிரயோகின்றது, கடந்த 9 ஆம் திகதி பயங்கரவாதத்தை ஆரம்பித்தவர்கள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான், அது தனி நபர்களுக்கு வேறுபடாது" எனக் குறிப்பிட்டார்.

