திருடனிடம் மீட்ட தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Gold
By Bavan Apr 30, 2026 10:34 AM GMT
Report

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் போன்ற திருட்டுப் பொருட்களை வீட்டில் வைத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயித்தியமலை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (29) மாலை கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வாழைச்சேனை காவல்துறை பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான எரான்! சஜித் தரப்பின் அதிரடி முடிவு

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான எரான்! சஜித் தரப்பின் அதிரடி முடிவு

ஆரம்பக்கட்ட விசாரணை

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நாவலடி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை (28) கைது செய்த காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த திருடன் திருடிய தங்க ஆபரணங்கள் பணம் என்பவற்றை வீட்டில் வைத்திருந்துள்ளார்.

திருடனிடம் மீட்ட தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது | Gold Jewellery Recovered From Thief Police Officer

இதன்போது திருடனின்  வீட்டிற்கு வந்த ஆயித்தியமலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த காவல்துறை உத்தியோகத்தர், நான் தான் இந்த சம்பவத்தை விசாரணை செய்து வருவதாக கூறி திருடனிடம் இருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை வாங்கி எடுத்துக் கொண்டார்.

பின்பு, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் அவரது நண்பர் ஒருவரிடம் அந்த திருட்டுப் பொருட்களை வைக்குமாறு கொடுத்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

200-க்கும் மேற்பட்ட புதிய எண்ணெய் - எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்துள்ள சீனா

200-க்கும் மேற்பட்ட புதிய எண்ணெய் - எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்துள்ள சீனா

 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல் 

இதனையடுத்து குறித்த காவல்துறை உத்தியோகத்தரை உதவி காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய சம்பவ தினமான நேற்று மாலை கைது செய்ததுடன் நண்பனிடம் கொடுத்து வைத்திருந்த திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தையும் மீட்டுள்ளனர்.

திருடனிடம் மீட்ட தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது | Gold Jewellery Recovered From Thief Police Officer

கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரை வாழைச்சேனை நீதிமன்றில் இன்று (30) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு வருகை

திறைசேரியின் செயலாளர் சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு வருகை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026