விரைவாகக் குறைந்து வரும் தங்கத் தேவை..! தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
தங்கத்திற்கான உலகளாவிய தேவை விரைவாகக் குறைந்து வருகிறது. தொழிற்துறை மற்றும் நகைகளுக்கான பாரம்பரிய தேவை தொடர்ந்து சரிந்து வருவதைக் காண முடிகிறது.
குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்க விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
தங்கத்தின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் இன்று தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை ரூபா 622,523 ஆகும்.
தங்க விலையானது 2018ம் ஆண்டுக்கு பிறகு மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து 5 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இன்னும் குறைவடையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
டொலரின் மதிப்பானது தொடர்ந்து தங்க விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்
24 கரட் | 1 கிராம் | ரூபாய் 21,960.00 |
24 கரட் | 8 கிராம் (1பவுன் ) | ரூபாய் 175,700.00 |
22 கரட் | 1 கிராம் | ரூபாய் 20,130.00 |
22 கரட் | 8 கிராம் (1 பவுன்) | ரூபாய் 161,050.00 |
21 கரட் | 1 கிராம் | ரூபாய் 19,220.00 |
21 கரட் | 8 கிராம் (1 பவுன்) | ரூபாய் 153,750.00 |