சடுதியாக குறைவடையும் தங்க விலை..! தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்
தங்க விலை
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது.
குறிப்பாக சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1716 டொலர்கள் என்ற அளவில் காணப்படுகின்றது.
தங்க விலையானது 2018ம் ஆண்டுக்கு பிறகு மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது.
இது தொடர்ந்து 5 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இன்னும் குறைவடையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
டொலரின் மதிப்பில் பிரதிபலிக்கும் தங்க விலை
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதனை குறைக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தங்க விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டொலரின் மதிப்பில் பிரதிபலிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆக இனி வரவிருக்கும் மாதங்களிலும் டொலரின் மதிப்பு வலுவடைய காரணமாக இருக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
1 மாத சரிவில் தங்க விலை
வட்டி விகிதம் மீண்டும் 4% மேலாக உயர்த்தப்படலாம் என்று அமெரிக்க மத்திய வங்கியானது சுட்டிக் காட்டியுள்ளது.
ஆக இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் தங்க விலையானது 1 மாத சரிவில் காணப்படுகின்றது.
மேலும் வட்டி விகிதமானது அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இதன் காரணமாக மேலும் தங்க விலையானது மேலும் அழுத்தத்திலேயே இருக்கலாம் என்றும் ஏற்றம் கண்டாலும் பெரியளவில் இருக்காது என ஒரு தரப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
டொலரின் மதிப்பானது தொடர்ந்து தங்க விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
சர்வதேச சந்தையில் தங்க விலை
தங்க விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 12.35 டொலர்கள் குறைந்து, 1715.85 டொலராக வர்த்தகமாகி வருகின்றது.
இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்றுக் கீழாக தொடங்கியுள்ளது.
ஆக தங்க விலையானது சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 1.62% குறைந்து, 17.593 டொலராக காணப்படுகின்றது.
வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று மேலாகவே தொடங்கியுள்ளது.
எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது.
ஆக வெள்ளி விலையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.