மத்திய கிழக்கு யுத்தம் : சபையில் அரசின் நிலைப்பாட்டை அறிவித்த ஜனாதிபதி அநுர
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு இன்று (03) விஜயம் செய்து, சபையில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, உலக அமைதிக்கு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
அதன்படி, உலக பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்க்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இந்த அச்சுறுத்தல் நிலையிலிருந்து, தனித்துச் செயற்படுவதற்கு இலங்கைக்கு இயலுமை கிடையாது. எனினும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச நாடுகளுடன் இணைந்து, சமாதானத்திற்கான அர்ப்பணிப்புகளை மேற்கொள்வதற்கு இலங்கையும் கடமைப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்குத் தடைகள் ஏற்படக்கூடும் எனவும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பெரும் சிக்கல் உருவாகும்.
சுற்றுலாத் துறை, வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளுக்கும் இதன் மூலம் பாதிப்புகள் ஏற்படும்“ என ஜனாதிபதி தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |