கனடா வழியே அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல்! குற்றத்தை ஒப்புக்கொண்ட மெக்சிகோ கும்பல்
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நூற்றுக்கணக்கான மக்களைச் சட்டவிரோதமாகக் கடத்திய மெக்சிகோவைச் சேர்ந்த மூவர், நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்த மூவருக்கும் வரும் நவம்பர் மாதத்தில் 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு இணை குற்றவாளி கடந்த மே மாதமே குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்குச் செப்டம்பரில் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
தீவிர நடவடிக்கை
வடக்கு நியூயார்க் மாநிலத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு விசாரணை அமைப்பும் (HSI) அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து இந்த விரிவான விசாரணையை நடத்தின.

கனடா எல்லை வழியே நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல்களைத் தடுக்க அமெரிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |