விசாரணைகளை எதிர்கொள்ள தயார் : கைதுக்குப் பின் நாமலின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு
என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் எக்ஸ் (X) தளத்தில் அவர் சார்பில் வெளியிட்ட பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மக்களுக்கு உரையாற்றவுள்ள ஜனாதிபதி
என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.

சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன். இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.
மாபெரும் மக்கள் பேரணி
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
For years, before this Government came to power, public statements were made alleging that significant sums of public money had been misappropriated, with promises that any unlawfully obtained funds would be recovered and returned to Sri Lanka.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 4, 2026
The Government has now been in…
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.
எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது.
அரசியல் அதிகாரம் தற்காலிகமானது. உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும். இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20