செம்மணி மனிதப்புதைகுழி : பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு வலியுறுத்தும் OHCHR

Jaffna OHCHR Volker Türk chemmani mass graves jaffna
By Sathangani Sep 05, 2026 09:57 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன்கூடிய தரக்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் இம்மீறல்களை நிகழ்த்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் இருந்தவர்களை அடையாளங்காணல் உள்ளடங்கலாக இதுபற்றிய பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு : ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு : ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்

உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

அதற்கமைய இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும் வகையில் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையானது 2025 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2026 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி : பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு வலியுறுத்தும் OHCHR | Chemmani Massgrave Impartial Criminal Investigatio

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பத்தி கூட்டுப் புதைகுழியில், 2026 ஜூலை மாத இறுதியில், குழந்தைகள் உட்பட 477க்கும் மேற்பட்ட நபர்களுக்குரிய எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன.

2025 செப்டம்பரில், செம்மணி கூட்டுப் புதைகுழி விசாரணை குறித்த தனது உண்மை கண்டறியும் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டதுடன், சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க, நம்பகமான, வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமாக வழிநடத்தப்படும் செயல்முறையை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது.

QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் : வெளியான தகவல்

QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் : வெளியான தகவல்

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்

மழையின் காரணமாக ஏழு மாத காலத்திற்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வரை, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் 2026 ஏப்ரலில் பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டதுடன், தூதரகப் பிரதிநிதிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அனுமதி வழங்கியது.

செம்மணி மனிதப்புதைகுழி : பக்கச்சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு வலியுறுத்தும் OHCHR | Chemmani Massgrave Impartial Criminal Investigatio

இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணிகள் மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதையும், சாத்தியமான கட்டளைப் பொறுப்பு குறித்த விசாரணைகள் உட்பட பாரபட்சமற்ற குற்றவியல் விசாரணைகள் அவற்றுடன் நடைபெறுவதையும் உறுதிசெய்ய, சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை நாடுமாறு இந்த அலுவலகம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

மேலும், தற்போதுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் செயற்படுத்துமாறு இந்த அலுவலகம் பரிந்துரைப்பதுடன், அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆட்கொணர்வு வழக்குகளையும், குறிப்பாக வலிந்து காணாமல் போகச் செய்தல் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளையும் அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிரடியாக குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை!

இலங்கையில் அதிரடியாக குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026