கொத்மலையில் 500 அடி பள்ளத்தில் பாய்ந்த கெப் வாகனம்!
நுவரெலியா- கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியில் கெப் வாகனம் ஒன்று 500 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (22-10-2026) மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கெப் வாகனம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியிலிருந்து கடதொர பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 54 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் கொட்டகபிட்டிய வடக்கு, கடதொர பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காயங்கள்
அத்தோடு இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான 50 வயதுடைய பெண் ஒருவர், சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அட்டபாகே 17ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


