திடீர் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை..! இன்றைய தங்க நிலவரம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றமை தெரிய வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 605,891 ரூபாவாக பதிவாகியுள்ளது.
குறைவடைந்து வரும் தங்கத்தின் தேவை
இதேவேளை, உலக அளவில் மக்கள் மத்தியில் தங்கத்தின் தேவை விரைவாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்க விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
டொலரின் மதிப்பானது தொடர்ந்து தங்க விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
இதேவேளை, இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது.
கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தங்கத்தின் விலை இரண்டு லட்சம் வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்க விலை விபரம்
24 கரட் | 1 கிராம் | ரூபாய் 21,380.00 |
24 கரட் | 8 கிராம் (1பவுன் ) | ரூபாய் 171,000.00 |
22 கரட் | 1 கிராம் | ரூபாய் 19,600.00 |
22 கரட் | 8 கிராம் (1 பவுன்) | ரூபாய் 156,800.00 |
21 கரட் | 1 கிராம் | ரூபாய் 18,710.00 |
21 கரட் | 8 கிராம் (1 பவுன்) | ரூபாய் 149,700.00 |