தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல் - மீண்டும் சரிவில் விலை ; இன்றைய விலை விபரம்
உலக சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றுக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது சமீப காலமாக வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
கொழும்பு செட்டியார் தெரு நிலவரங்களின் படி இன்றைய நாளுக்கான ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நிலவரம்
கடந்த சில நாட்களாக 149,000 ரூபாவாக காணப்பட்ட ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அத்துடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக காணப்படுகிறது. அந்தவகையில், இன்றைய நாளுக்கான 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலையில் தொடர் வீழ்ச்சிகள் காணப்பட்டாலும், ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபா வரையில் குறைந்த போதிலும், இன்னும் விலை குறைவை எதிர்ப்பார்த்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நிலவரம்
தமிழ்நாட்டில் கடந்த வாரம் அதிகரித்த தங்கத்தின் விலையானது தற்போது குறைவடைந்துள்ளது.
அதன்படி இன்றையதினம் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபா குறைந்து ஒரு கிராம் இந்திய மதிப்பில் 5,437 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபா குறைந்து ஒரு சவரன் 43,496 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயத்தில், 18 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபா குறைந்து கிராம் 4,454 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபா குறைந்து ஒரு சவரன் 35,632 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
