தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
இலங்கையில் இன்று (13) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய (12) தினத்துடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 410,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
குறைவடைந்த தங்க விலை
அத்துடன், நேற்றைய தினம் 381,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,800 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 379,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்றைய தினம் உள்நாட்டு தங்கச் சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |