இலங்கையில் 7,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அதன்படி, நேற்றைய தினம்(09) இலங்கையில் தங்கவிலை 4,000 ரூபாயால் குறைந்திருந்த நிலையில் இன்று(10) மீண்டும் 7,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய விலை
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 5,159 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன் வெள்ளியின் விலை 88.15 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |