இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய எம்.பி! தொடரும் விசாரணை
Bandaranaike International Airport
Sri Lanka
By pavan
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகைத் தந்த நிலையிலேயே அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவந்துள்ளளார் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது சுங்கப்பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வில் உரை
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா உரை ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி