லண்டனில் நடைபெற்ற புலம்பெயர் தமிழர்களின் முதலாவது ‘கொல்ப்’ போட்டி
புலம்பெயர் தமிழ்மக்களின் விளையாட்டுத்துறை தளத்தில் ‘கோல்ப்’ எனப்படும் குழிப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானிய தலைநகர் லண்ட்னிலுள்ள ஸ்ரான்மோர் கோல்ப் மைதானத்தில் போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த 03.09.2021 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமார் 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
தமிழ் இளையோர் பெண்கள் மற்றும் மூதாளர்களும் பங்கேற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள Tamil Gofers Association என்ற இந்த சங்கம், உலகளாவிய ரீதியில் கோல்ப் விளையாட்டுத்துறை ஊடாக தமிழர்களை இணைக்கும் ஒரு பாலமாக அமையும் என அதன் தலைவரும் பிரபல தொழிலதிபருமான யோகநாதன் ரதிஷன் தெரிவித்திருந்தார்.
ஆரம்பநாள் நிகழ்வில் ஆறு பிரிவுகளில் கொல்பட் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.
உலகலாவிய ரீதியில் தமிழர்களுக்கென்ற உருவாக்கப்பட்டுள்ள முதலாவது கொல்ப் விளையாட்டுச் சங்கம் இது என்பதுடன், தமிழர்களுக்கு என்று புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற முடிலாவது ‘கொல்ப்’ போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.