சடுதியாக குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்க விலையில் இன்று (09) சடுதியாக குறைவடைந்துள்ளது.
அந்தவகையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 5,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்க விலை
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
இந்தநிலையில், ஒரே நாளில் பவுணுக்கு 5,000 ரூபாயால் விலை சரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |