அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தரப்பு அறிவித்துள்ளது.
குறித்த தகவலை அரச நிர்வாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சர் சந்தன அபேரட்ன (Chandana Abeyratne) தெரிவித்துள்ளார்.
அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரட்ன தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு அநீதி
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள், கடந்த அரசாங்கங்களின் சில தீர்மானங்கள் போன்ற காரணிகளினால் அரச சேவையில் ஒவ்வொரு தரத்திற்கும் இடையில் கடுமையான சம்பள முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
1992ஆம் ஆண்டு முதலே சில சேவைகளில் சம்பள முரண்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அரச ஊழியர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் சம்பள முரண்பாடு களைவது சவால் மிக்கது என அமைச்சர் அபேரட்ன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |