அதற்கு வாய்ப்பில்லை : ட்ரம்பிற்கு கனடா பிரதமர் பதிலடி
கனடாவை(canada) அமெரிக்காவின்(us) 51-வது மாநிலமாக மாற்றுவதற்கு பொருளாதார பலத்தை பயன்படுத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின்(donald trump) கருத்துக்கு தற்போது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கனடாவை இணைக்க வாய்ப்பில்லை
அந்தப் பதிவில், “அமெரிக்காவுடன் கனடாவை இணைக்க வாய்ப்பில்லை” எனப் பதிவிட்டுள்ளார்
There isn’t a snowball’s chance in hell that Canada would become part of the United States.
— Justin Trudeau (@JustinTrudeau) January 7, 2025
Workers and communities in both our countries benefit from being each other’s biggest trading and security partner.
நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்
மேலும், இதுபற்றி கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி(melanie joly), “ஒருபோதும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை” என்று அவரது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
President-elect Trump’s comments show a complete lack of understanding of what makes Canada a strong country.
— Mélanie Joly (@melaniejoly) January 7, 2025
Our economy is strong.
Our people are strong.
We will never back down in the face of threats.
அந்தப் பதிவில், “ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பின் கருத்துக்கள் கனடாவை வலிமையான நாடாக மாற்றுவதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைத்தான் காட்டுகிறது.
கனடாவின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |