யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 09, 2025 10:57 AM GMT
Report

விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 வட மாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக் கோரி பொ.ஐங்கரநேசன இன்று (09) மனுவொன்றைச் சமர்ப்பித்த பின்னர் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் சுண்ணாம்புக்கல் வடமேற்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் கரையோரத்தை அண்டிக் காணப்படும் ஒரு இயற்கை வளமாகும்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து : தவில் வித்துவானின் மகன் பலி!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து : தவில் வித்துவானின் மகன் பலி!

சுண்ணாம்புக்கல் அகழ்வு

புவிச்சரித வரலாற்றில் பல மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மயோசின் காலத்தில் கடலின் அடித்தளப் படிவுகளாகத் தோற்றம்பெற்ற இப்பாறைகள் சீமெந்து தயாரிப்பிலும், இதர கட்டுமானங்களிலும் பிரதான மூலப் பொருளாக விளங்குகின்றது.

யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை | Limestone Mining Issue In Jaffna

கூடவே, சூழலியல் ரீதியாகக் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதைத் தடைசெய்வதிலும், நிலத்தடி நீரோட்டத்திலும் மிகவும் இன்றியமையாத பங்களிப்பையும் வழங்கி வருகிறது.

சமீப நாட்களாகச் சுண்ணாம்புக்கல் அகழ்வும் அதனை வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதும் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

சுண்ணாம்புக்கல் அகழ்வு பயிர்ச் செய்கைக்காக இரண்டடி ஆழம் வரையில் கிளறி எடுத்தல் என்ற நிலையில் இருந்து, இன்று சீமெந்து தயாரிப்புக்காகக் கனரக வாகனங்களைக் கொண்டு அகழ்ந்தெடுத்தல் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

குறிப்பாக, தென்மராட்சி சரசாலையில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாக அரச காணிகளிலும், தனியார் காணிகளிலும் பாரிய அளவில் சுண்ணாம்புக்கல் அகழ்வு இரவு நேரங்களில் இடம்பெற்று வருகிறது.  

களைய நடவடிக்கை

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயக்கப்படாதிருப்பதற்குச் சுண்ணாம்புக் கல்லைப் பெறுவதில் உள்ள இடர்பாடுகளே காரணம்.

கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஏற்பட்ட பிரமாண்ட குழிகள் இன்னமும் மூடப்படாத நிலையில் இனிமேலும் அகழ்வைத் தொடர்வது சூழல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கிளிங்கர்களை எடுத்துவந்து, சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்க முடியும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை | Limestone Mining Issue In Jaffna

இந்நிலையில் இங்கிருந்து வேறு மாவட்டங்களுக்குச் சுண்ணாம்புக்கல்லை எடுத்துச்செல்வது மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்களை அரைத் தயாரிப்பாகவோ அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளாகவோ கருதமுடியாது என்பதால் இதனை எடுத்துச் செல்வதற்குப் போக்குவரத்து உரிமம் அவசியம் எனப் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் யாழ். மாவட்டச் செயலருக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் வெளிமாட்டங்களுக்குத் தங்கு தடையில்லாமல் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஆளுநர் உடனடியாக சுண்ணக்கல் அகழ்வில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளைக் களைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”என்றார்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

You may like this....


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்

தாவடி, யாழ்ப்பாணம்

08 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை

03 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, வவுனியா

08 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ரஸ்போஹ், France

28 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரந்தன்

22 Dec, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

06 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024