இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

Sri Lanka Army Indian fishermen Jaffna Sri Lanka Fisherman
By Thulsi Jan 09, 2025 07:54 AM GMT
Report

புதிய இணைப்பு

எல்லை தாண்டி தடை செய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை, எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பன்னிரு இந்திய கடற்றொழிலாளர் நேற்று (08) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

படகு அரசுடமையாக்க உத்தரவு

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கடந்த நவம்பர் 27ம் திகதி எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் வழக்கில் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேற்கொண்ட வழக்கில் விளக்கமறியலில் கடற்றொழிலாளர்கள் பன்னிருவரும் இன்று 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | 10 Indian Fishermen Arrested In Karainagar Jaffna

குறித்த வழக்கு மீண்டும் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடூழிய சிறை என்ற நிபந்தனையுடன் பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். படகு அரசுடமையாக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

நேற்றிரவு இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை 23.01.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவிட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் - காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகை (01) கைப்பற்றியதுடன் 10 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 23.01.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (9.1.2025) யாழ்ப்பாணம் - காரைநகர் கோவளம் கலங்கரை விளக்கத்தில் இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழில் படகை (01) கைப்பற்றியதுடன் 10 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

சட்டவிரோத மீன்பிடி நடைமுறை

வெளிநாட்டு கடற்றொழில் படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளை கட்டுப்படுத்த கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | 10 Indian Fishermen Arrested In Karainagar Jaffna

இதன்படி காரைநகர் கோவளம் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் இந்திய கடற்றொழில் படகுகளை கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஓப்படைக்கப்படவுள்ளனர். 

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | 10 Indian Fishermen Arrested In Karainagar Jaffna

யாழ். ஏ9 வீதியில் அதி சொகுசு பேருந்து விபத்து : குடும்பஸ்தர் பலி

யாழ். ஏ9 வீதியில் அதி சொகுசு பேருந்து விபத்து : குடும்பஸ்தர் பலி

யாழில் விரைந்து நடவடிக்கை எடுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை : மக்கள் பாராட்டு!

யாழில் விரைந்து நடவடிக்கை எடுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை : மக்கள் பாராட்டு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026