பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (06.12.2024) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில் பெருமளவிலான துணிகள் வீணடிக்கப்படுவதனால் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை சீருடை
இதேவேளை, இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன நாட்டிலிருந்து சீருடை துணி வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயத்தை யாழில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |