இந்தியாவிலிருந்து விவசாயிகளுக்கு வந்த மகிழ்ச்சியான செய்தி
Sri Lanka
India
By Sumithiran
இலங்கையில் இரசாயன உர பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் விவசாய செய்கை முற்றிலுமாக சீரழிவை சந்தித்துள்ளது.
குறிப்பாக நெற்செய்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்ட நிலையில அரிசி விலை உச்சத்தை தொட்டுள்ளது.அதேபோன்றே ஏனைய பயிர்ச்சிசெய்கைகளும் கடுமையான பாதிப்பை சநதித்துள்ளன.
இந்த நிலையில் இலங்கைக்கு தற்போது வழங்கும் கடன் வசதிகளின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான யூரியா உரமே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

