கோட்டாபயவின் பதவி விலகல் -சபாநாயகர் சற்று முன்னர் வெளியிட்ட அறிவிப்பு(இரண்டாம் இணைப்பு)
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகள் சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரின்பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் பதவி விலகல் - உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன் -வெளிவந்த தகவல்
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கடிதம்
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரின் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை உறுதிப்படுத்தப்பட்டவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தின் நம்பகத்தன்மை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடிதத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விரும்புவதால் உத்தியோகபூர்வ அறிவிப்பு தாமதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பணிப்புரை
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து கடிதத்தின் பிரதியை பெற்றுக்கொள்ளுமாறு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் இந்த விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு பணித்துள்ளார்.
இதற்கிடையில், அதிபர் ராஜபக்சவின் அசல் ராஜினாமா கடிதம் சிங்கப்பூரில் இருந்து விரைவில் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

