மொழி பிரச்சினைக்கு தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Artificial Intelligence
By Dilakshan
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தகவலை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து இந்த மென்பொருளை உருவாக்க ஒத்துழைத்து வருவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
நொடிகளில் தமிழ் மொழிபெயர்பு
இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த மென்பொருள் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய மென்பொருள் பேசும் சிங்கள உள்ளடக்கத்தை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்கும் என்றும், நேர்மாறாகவும் இது இருக்கும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
