தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கையர்!
பெங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில், மூன்று பைதன் வகை பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தாய்லாந்து வனவிலங்கு குற்ற புலனாய்வு மைய பணிப்பாளர் பொலவீ புசாக்கியாட, “சீஹான்” என்ற பெயரில் உள்ள இலங்கை நபர், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.06 மணிக்கு தாய் எயர்வேஸ் TG308 விமானத்தில் பெங்காக் வந்தார்.
இந்த நபர் கடந்த காலங்களில் பல்வேறு விலங்குகளை, ஓநாய்கள், பறவைகள், தவளைகள், ஆமைகள் உள்ளிட்டவற்றை கடத்தியதாக பதிவு உள்ளது. 2024ஆம் ஆண்டு கொழும்பில் இவர் விலங்கு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டும் இருந்தார்.
தனிப்பட்ட சோதனை
அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், தாய்லாந்து வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் சுங்கத் துறை உட்பட பல அமைப்புகள் இணைந்து அவரை கண்காணித்து வந்தன.
புதன்கிழமை மாலை, இவர் ஒரு வாடகை வாகனம் ஒன்றில் விமான நிலையம் வந்ததும், வழக்கமான சோதனைக்கு பிறகு, சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உடலில் தனிப்பட்ட சோதனை நடத்தப்பட்டது.
விசாரணை
அப்போது மூன்று பால் பைதன் வகை பாம்புகள் அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாம்புகள், சர்வதேச பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் (CITES Appendix II) சேர்க்கப்பட்டவை. இவைகளை ஏற்றுமதி செய்ய import-export அனுமதி கட்டாயமாக தேவைப்படும்.
இதனையடுத்து, சீஹானுக்கு எதிராக தாய்லாந்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் சுங்கச் சட்டங்கள் உட்பட பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
