சர்வாதிகாரிகளை போல தப்பிச் சென்ற கோட்டாபய - அநுரகுமார விளாசல்
சர்வாதிகாரிகளைப் போன்று தப்பிச் செல்ல வேண்டிய நிலை
அதிக இரத்தம் சிந்தாமல் மிகவும் ஜனநாயக ரீதியில் இந்த வெற்றி பெறப்பட்டதாகவும் நேற்று(09) இரவு விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்துக் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவேண்டும்
கோட்டாபய ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்தை துறப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததால், அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஜனநாயகப் பொதுப் போராட்டத்தின் உண்மையான சாராம்சத்தைப் புரிந்துகொண்டு, கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை நாட்டிலிருந்து மீட்டெடுக்கவும், நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
களப்போராளிகளுக்கு நன்றி
இந்த ஊழல் ஆட்சியை ஒழிக்க நாடு முழுவதும் உள்ள மக்களும், தேசிய மக்கள் படை தலைமையிலான பல்வேறு அமைப்புகளும் பெரும் பங்களிப்பை வழங்கினர், அதற்காக காலி முகத்திடல் போராளிகள் பெரும் தியாகங்களைச் செய்தார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றியையும், மரியாதையையும் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
