எங்கு இருக்கிறார் கோட்டாபய - விடை தெரியாத மர்மம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவரது இல்லத்திற்குள் மக்கள் கூட்டம் நுழைவதற்கு முன்பே அவர் வெளியேறிவிட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
"அரச தலைவர் பாதுகாப்பின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டார்," என்று பெயரிடப்படாத மூத்த பாதுகாப்பு அதிகாரி AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார். "அவர் இன்னும் அரச தலைவர், அவர் இராணுவப் பிரிவினால் பாதுகாக்கப்படுகிறார்."என்றும் அவர் தெரிவித்தார்.
அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர்அலுவலகம் ஆகிய இரண்டும் தற்போது போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அரச தலைவர் ராஜபக்ச எங்கிருக்கிறார் என்பது குறித்து கட்சித் தலைவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.
கட்சித் தலைவர்களின் கோரிக்கை குறித்து அரச தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் கடைசியாக பகிரங்கப்படுத்தப்பட்ட பொது தோற்றம் நேற்று அரச தலைவர் அலுவலகத்தில் ஈரான் தூதுவருடனான சந்திப்பாகும்.
அதன் பின்னர் அரச தலைவரின் ஊடகப் பிரிவு அரச தலைவரின் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
