மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் கோட்டாபய!
Parliament of Sri Lanka
Gotabaya Rajapaksa
Presidential Secretariat of Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
President of Sri lanka
By Kanna
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
அரச தலைவர் மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று அரச தலைவர் என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அரச தலைவர் கடிதம் மூலம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் முதல் கட்டமாக நாளை முற்பகல், அரச தலைவர் மாளிகையில் அரசாங்கத்தில் உள்ள சகல கட்சிகளுக்கும் விசேட கூட்டத்திற்கு அரச தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி