மற்றொரு நாட்டை தெரிவு செய்தார் கோட்டாபய..! நாளை பயணம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து இலங்கையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்பொழுது சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தஞ்சமடைய நாடு இல்லாமல் தவிக்கும் கோட்டாபய
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்துடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து இரண்டு நாட்களில் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆட்சிக்காலத்தின் பாதியில் பதவியில் இருந்து விலகிய முதல் இலங்கை அதிபர் என்ற வரலாற்றையும் கோட்டாபய உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நாளைய தினம் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு செல்ல எண்ணியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்ல உள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக தகவல் எதனையும் வெளியிடவில்லை.
அதேவேளை இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தாய்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் ரட்சேடா தன்னடிரிக்கிடம் (Ratchada Thanadirek) கேட்டுள்ளதுடன் அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.
கோட்டாபய நாடு திரும்புவதற்கான காலம் இதுவல்ல - ரணில்
தற்போதைய சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என இலங்கையின் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்க என கூறியிருந்தார்.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி வோல்ட் ஸ்ட்ரீட் ஊடகத்திற்கு போட்டியளித்த ரணில் விக்ரமசிங்க, “கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான காலம் இது என நான் நம்பவில்லை” எனக் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
YOU MAY LIKE THIS