கோட்டாபயவின் தலைமையில் புதிய குழு நியமனம்!
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kanna
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கபெற்றமையை அடுத்து வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் 7 குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குழுவின் உறுப்பினர்கள்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மீன்வளத்துறை அமைச்சர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், விவசாய அமைச்சர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், வர்த்தகம் வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் குறித்த குழுவின் உறுப்பினர்களாகும்.
வாழ்க்கைச் செலவை நிலையாக பேணுவதற்குத் தேவையான கொள்கை மற்றும் நடைமுறை தீர்வுகள் இந்த குழுவின் மூலம் எடுக்கப்பட உள்ளன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்