கோட்டாபய தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
Go Home Gota
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Supreme Court of India
By Kanna
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி மனுக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 50 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி