நாடு திரும்பும் கோட்டாபய - யாழில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
மீண்டும் அரசியலில் கோட்டாபய
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என தாம் நம்பவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் முன்னாள் அதிபர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கிறீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இல்லை. ஒருபோதும் இல்லை. நான் அவ்வாறு நினைக்கவில்லை." என குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை
மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு காரணமாக, பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கான தடையை அரசாங்கம் அண்மையில் நீக்கியதை மறுத்தார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பது குறித்து கேட்டதற்கு, பெரும்பாலான அரசியல் கட்சிகள் பொதுவான வேலைத்திட்டம் குறித்து சாதகமாக கருத்து தெரிவித்துள்ளதாகவும், ஆனால் சில கட்சிகள் அரசாங்கத்தில் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளன.
“அனைத்து அரசியல் கட்சிகளையும் தேசிய அரசாங்கத்திற்கு வரவழைப்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் குறைந்தபட்ச வேலைத்திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் அதுவே இப்போதைக்கு போதும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

