கோட்டாபயவின் மாலைதீவு வருகை தொடர்பில் மாலைதீவு நாடாளுமன்றத்தில் பிரேரணை
நாடாளுமன்றத்தில் பிரேரணை
கோட்டாபயவுக்கு அடைக்கலம் கொடுத்த மாலைதீவு அரசாங்கம் எவ்வாறான நடைமுறையின் கீழ் செயற்பட்டது என்பது பற்றி மாலைதீவு நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாலைதீவு தேசிய கட்சியால் மாலைதீவு நாடாளுமன்றத்தில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மாலைதீவின் முன்னாள் பிரதமர் "இது ஒரு நல்ல திட்டமாக கருதுவதாகவும் இந்த விடயத்தில் தனக்கு அக்கறை இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் உலக தலைவர்கள் அனைவரும் இலங்கை மக்களின் ஆசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சியை அடுத்து கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை சிறிலங்கா விமானப்படையின் (Antonov-32) எனும் விமானம் மூலம் மாலைதீவிற்கு சென்றிருந்தார்.
The parliamentary group of the Maldives National Party will be submitting a motion to the Parliament (Majlis) to clarify how Maldives Government acted in giving refuge to President Gotabaya
— Maldives National Party (@MNP_Secretariat) July 13, 2022
இந்நிலையில் கோட்டாபய மாலைதீவுக்கு சென்றதை எதிர்த்து மாலைதீவு விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதனையடுத்து பலத்த பாதுகாப்பின் மத்தியில் தனித்தீவுக்கு கோட்டாபய அழைத்து செல்லப்பட்டார்.
கோட்டாபயவின் மாலைதீவு வருகையை எதிர்த்து அந்நாட்டின் சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோட்டபாயவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கோட்டாபயவிற்கு எவ்வாறு அடைக்கலம் கொடுக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தும் பிரேரணையொன்றை மாலைதீவு தேசிய கட்சி சமர்பிக்கவுள்ளது.
