பொருளாதார சிக்கல்களுக்கு முதன்மை காரணி கோட்டாபயவே! சுமந்திரன் பகிரங்கம்
சுமந்திரன் உரை
பொருளாதார சிக்கல்களுக்கு முதன்மை காரணி அரச தலைவரே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று (29) மாலை இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் ஆணை மூலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்.."நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் இதனையே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் விரும்புகிறது. இல்லாது போனால் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாது.
அரச தலைவர் உடன் பதவி விலகி மக்கள் ஆணை மூலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதையே மக்களும் விரும்புவதுடன் கோட்டா ஹோ ஹோம் என்றும் கூறி வருகிறார்கள்.
19 ஆவது திருத்தம் இலகுவாக்கப்பட்டது 21 ம் திருத்தம் மூலமாக நிறைவேற்றதிகாரம் முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சிறந்தது" என்றார்.
