சிங்கப்பூருக்கு செல்லும் கோட்டாபயவின் கோரிக்கை : உயிர்த்த ஞாயிறு வழக்கின் முக்கிய தீர்ப்பு இன்று
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக சற்று முன்னர் வருகை தந்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில், இன்று (25) ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானம் அறிவிக்கவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கும்படி அவர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
சிங்கப்பூரில் சிகிச்சை
மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, கோட்டாபய ராஜபக்சவின் சட்டக் குழுவினர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வழக்கின் தீர்மானத்தை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

அந்தநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |