அரச ஊழியர்களின் பண்டிகைக் கால முற்பணம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரச உத்தியோகத்தர்களுக்கான 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணம் போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விசேட முற்பணம்
மேலும், பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 6,000 ரூபாய் உதவித்தொகையை அரச அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கான அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் எஸ்.அலோக பண்டார (S. Aloka Bandara) விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்பணம் வழங்கும் நடவடிக்கை 2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி தொடங்கி பெப்ரவரி 28 அன்று முடிவடையும் என்றும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |