மகிந்தவின் மனைவியின் படத்தை பிறேம் போடவும் அரசு பணம் செலவீடு :அம்பலப்படுத்திய நீதி அமைச்சர்
Parliament of Sri Lanka
Shiranthi Rajapaksa
Ministry of justice Sri lanka
Harshana Nanayakkara
By Sumithiran
சீனாவிற்கான விஜயத்தின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷராந்தி ராஜபக்சவின் படத்தை பிறேம் போட்டு அலங்கரிப்பதற்காக அரசாங்க பணம் செலவிடப்பட்டதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த படத்திற்கு பிறேம் போட ரூபா 09 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
படத்திற்கு பிறேம் போட கூட சொந்தப்பணத்தை செலவிடாத காலம்
ஒரு படத்திற்கு பிறேம் போட தனது சொந்தப் பணத்தைக் கூட செலவிட முடியாத ஒரு காலம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறைவனின் பெயரை அலங்கரிப்பதற்காகவும் அரசாங்கப் பணம் செலவிடப்பட்டதாகவும், அந்தக் கால ஆட்சியாளர்களும் அரசாங்கப் பணத்தால் பயனடைந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தலைமை நீதிபதி உள்ளிட்ட நிறுவனங்களின் செலவினத் தலைப்புகள் மீதான பட்ஜெட் குழு விவாதத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி