இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழு அச்சுறுத்தவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மின்சார சபையின் அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பமிட வற்புறுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சின் செயலாளர் இந்த விடயத்தை தனக்கு அறியப்படுத்தியதாக கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கையொப்பமிடுமாறு வற்புறுத்தல்
மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் இருவருக்கு, இரண்டு ஆவணங்களில் கையொப்பமிடுமாறு வற்புறுத்தப்பட்டதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆவணத்தில் கையொப்பமிட உடன்படவில்லையாயின் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளால் தமது அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட ஆலோசனை
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனை பெற்றுவருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்று அதிபருக்கு இந்த விடயத்தை
அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளஅமைச்சர் கஞ்சன விஜேசேகர,
அரசியலமைப்பு பேரவைக்கும் எழுத்து மூலம்
அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

