அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் இரத்து செய்யப்படும் சுற்றறிக்கை! வெளியான அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Sri Lanka Cabinet
By Kanna
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளிக்கிழமை விடுமுறைக்கான சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக கடந்த மாதம் அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்,மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியிருந்தது.
நெருக்கடியுடன் போராடும் இலங்கை எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், உணவுப் பயிரிடுவதற்கு அரச ஊழியர்களை ஊக்குவிக்கவும் குறித்த விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த விடுமுறையை இரத்து செய்ய தற்பொழுது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்